Wednesday, 16 May 2018

பேராவூரணி அருகே பயணி ஏறுவதற்குள் மினி பேருந்தை இயக்கியதால் பெண் படுகாயம்

பேராவூரணியை அடுத்த மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விவசாய கூலித் தொழிலாளி வீரம்மாள் (62) கடந்த வியாழனன்று முடச்சிக்காட்டில் உள்ள தனது மகள் வீடு சென்று விட்டு, ஊர் திரும்புவதற்காக முடச்சிக்காடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அவ்வழியே வந்த மினி பேருந்தை நிறுத்தி ஏறியுள்ளார். வீரம்மாள் பேருந்தில் ஏறுவதற்குள் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது.இதில் தவறி சாலையில் விழுந்த வீரம்மாளுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வீரம்மாளின் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment