Thursday, 28 June 2018

பண்ணைக் குட்டைகள் அமைக்க 100 சதவீத மானியம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.பண்ணைக் குட்டைகள், மழை பெய்கின்றபொழுது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை சேகரித்து வைத்துஅந்நிலத்தில் பயிர்களின் முக்கியமான வளர்ச்சி பருவத்தில்,பயிர்கள் நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும்பொழுது பயிர்களுக்குத் தக்க நேரத்தில் உயிர்பாசனம் மற்றும்துணைப்பாசனம் அளிக்க பயன்படுகிறது. இதனால் பயிர்கள்காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது.பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், சிக்கனமானதாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பினைப் பெற்ற அமைப்பாகவும் விளங்குவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, காவிரி டெல்டா கடைமடைவிவசாயிகள் மற்றும் கடலோர பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகளை ரூ.100 கோடி செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் 250 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூபாய் 2.50 கோடி மானியத்தில் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்பட உள்ளன.எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஆர்வமுள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, பட்டுக்கோட்டை அலுவலகத்தை நேரிலோஅல்லது தொலைபேசி மூலமாகவோ (04373-222816) தொடர்புகொண்டு பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment