சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடையும் நிலையில் விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. 61 நாட்கள் தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரிப்பு செய்து கடலுக்கு செல்வது வழக்கம். இதன்படி தற்போது படகுகள் பராமரிப்பு செய்து வர்ணம் தீட்டி கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். இவ்வாறு தயார் செய்யப்படும் படகுகளை தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு செல்லும் தருவாயில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி அளித்த பின்னர் தான் கடலுக்கு செல்லமுடியும் அப்போதுதான் மானிய டீசல் உள்பட அரசு நிவாரணங்கள் பெற முடியும். இதன்படி நேற்று( 9 ம்தேதி) மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் கணேசன் தலைமையில் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது படகின் அளவு, படகு பதிவு புத்தகம்,பதிவு எண் படகில் எழுதப்பட்டுள்ளதா? படகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளதா,மீன்பிடிக்க செல்லும்போது மீனவர்களுக்கு தேவையான உயிர்காக்கும் கருவிகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
Tuesday, 12 June 2018
மீன்பிடிதடைகாலம் 15ம் தேதி நிறைவு மல்லிப்பட்டினத்தில் விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment