Tuesday, 12 June 2018

குமரப்பா பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடக்க விழா

பேராவூரணி:பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ் 1 வகுப்புகள் தொடக்க விழா திங்கட்கிழமை பள்ளி விழா அரங்கில்நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச் செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாணவர்களை வாழ்த்தி பேசினார். அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சத்யா வரவேற்றார். இதில் அறங்காவலர்கள் பிரியதர்ஷினி, அஸ்வின்ஸ்ரீதர் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக பள்ளி முதல்வர் சுரேஷ் நன்றிகூறினார்.

No comments:

Post a Comment