Tuesday, 12 June 2018

மல்லிப்பட்டினத்தில் சூறைக்காற்று: கடலுக்குள் படகு கவிழ்ந்தது

மல்லிப்பட்டினம்: மல்லிப்பட்டினம் அருகேயுள்ள அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகன் செங்கோல்தாஸ். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீனவர்கள் நான்கு பேர் வெள்ளிக்கிழமை மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  கொள்ளுக்காடு என்ற இடத்தில் இருந்து 14 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென வீசிய சூறைக்காற்றால், நிலை தடுமாறி படகு கடலுக்குள் கவிழ்ந்தது. இதில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் நான்கு பேரும் கடலில் தத்தளித்ததைக் கண்ட, அக்கம்பக்கம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தங்கள் படகுகள் மூலம் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.  கடலுக்குள் கவிழ்ந்த படகை மீட்க சனிக்கிழமை காலை இரு படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று, பத்திரமாக மீட்டுக் கொண்டு கரை திரும்பினர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல்படையினர் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment