சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே பொது விநியோக அங்காடி மற்றும் கட்டிட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது விநியோக அங்காடி கட்டிடத்தை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து திறந்து வைத்தார். ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் குழ.சுந்தர்ராஜன், மாநில கயறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறியாளர்கள் கதிரேசன், சுகில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒப்பந்ததாரர் நாடியம் சிவ.மதிவாணன் நன்றி கூறினார்.
Tuesday, 12 June 2018
சேதுபாவாசத்திரம் அருகே பொது விநியோக அங்காடி திறப்பு விழா
thanjavur
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment