Thursday, 28 June 2018

பேராவூரணி அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

பேராவூரணி: பேராவூரணி அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த கொரட்டூர் அம்புலி ஆற்றில் அனுமதியின்றி சிலர் டிராக்டர்மூலம் மணலை அள்ளிக் கடத்துவதாக பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு வட்டாட்சியர் தலைமையில், வருவாய்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டிராக்டர் ஓட்டுநர் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment