Thursday, 28 June 2018

பேராவூரணி அருகே கொளக்குடி ஊராட்சியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்

கொளக்குடி: பேராவூரணி அருகே கொளக்குடி ஊராட்சியில் புதன்கிழமை மக்கள் நேர்காணல் முகாம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா 8 பேருக்கும், முதியோர் உதவித்தொகை ஆணை 7 பேருக்கும், பட்டாமாறுதல் ஆணை 6 பேருக்கும் என ரூ. 68 ஆயிரத்து 412 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர். இம்முகாமில் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment