Saturday, 30 June 2018

தஞ்சை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆட்சியர் உத்தரவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை (ராகிங்)தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடன் கலந் தாய்வுக் கூட்டம் புதன்கிழமை மாவட்டஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கேலி செய்வதை தடுக்கும் பொருட்டு கல்லூரி முதல்வரைதலைமையாக கொண்டு குழு அமைத்திட வேண்டும். அக்குழுவின் உறுப்பினர்களின் விவரங்கள், கைபேசிஎண்கள் கல்லூரியின் வளாகத்தில் தெளிவாக ப்ளக்ஸ் போர்டு வைத்திட வேண்டும். இக்குழுவில் மாணவர் பிரதிநிதிகளும் சேர்க்கப்பட வேண்டும். கல்லூரிவிடுதிக்கென்று ஒரு தனி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.  கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கென தனியாக விடுதிகள் பராமரித்திடவும், முதலாமாண்டு மாணவர்கள் என தனியே தெரியும் வகையில்தனி நிறத்தில் அடையாள அட்டை ரோப் வழங்கிட கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்லூரியில் மாணவர்கள் புகார்கள்தெரிவித்திட ஒரு புகார் பெட்டி வைத்திடவேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் வாகனம் நிறுத்துமிடம், சிற்றுண்டிமையம், மைதானம் ஆகிய இடங்கள் மற்றும் கல்லூரி வளாகத்திலும் கண்டிப்பான முறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.மேலும் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்தால் கண்காணிப்பு கேமிராக்கள் முறையாக செயல்படுகிறதா என்பதைகண்காணிக்க வேண்டும்.  பார்வையாளர்கள் வருகைப் பதிவேடு முறையாகபராமரிக்க வேண்டும். கேலி செய்வது தொடர்பான புகார்கள் அளிக்கும் பொழுது எந்தவித தயக்கமின்றி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment