Saturday, 30 June 2018

ஆதனூர் பங்கு புனித அன்னம்மாள் தேவாலய கொடி மரம்அடிக்கல் நாட்டு விழா

பேராவூரணி: ஆதனூர் பங்கு புனித அன்னம்மாள் தேவாலயத்தின் புதிய கொடிமரம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு ஆதனூர் பங்கு தந்தை அருட்திரு டி.தேவசகாயம் அடிகளார் தலைமை வகித்தார். ஆர்.சி.சபை நிர்வாகிகள் ப.சின்னப்பதாஸ், அ.ஏசையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதன்கிழமை புதிய கொடி மரம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் சமூக சேவகர் டாக்டர் வேத.குஞ்சருளன், சபை நிர்வாகிகள் ஆ.இருதயராஜ், எம்.ஏ.தாசன், அ.பிரான்சிஸ் கண்டாக், துரை.மார்க், அ.கோஸ்துரை, சி.சக்கரியாஸ், இ.பாலன், அ.ராஜேந்திரன், பேராவூரணி அருள்சாமி, சவரிமுத்து, பீட்டர் பிரான்சீஸ் ஆசிரியர், ரயில்வே ஒப்பந்தகாரர் பீ.காரல்மார்க்ஸ் உள்ளிட்ட இறைமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment