பேராவூரணி, மார்ச் 1- பட்டுக்கோட்டை கழக மாவட் டம் பேராவூரணி ஒன்றியம் சித்தாதிக்கோட்டை சேர்ந்த மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கதிர்வேலுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சூரன் விடுதியை சேர்ந்த சு.இரம்யா விற்கும் 7.2.2018 அன்று காலை 10 மணிக்கு பேராவூரணி எஸ்.டி.டி.திருமண மகாலில் கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் தலைமையிலும் வாழ்வியல் உரையுடனும் வாழ்க்கை இணையேற்பு விழா இனிதே நிறைவேறியது.
இந்நிகழ்வில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட புரவலர் ஆசிரியர் சி.வேலு வரவேற்புரை நிகழ்தினார். இந்நிகழ்விற்கு கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித் தார்த்தன், மாவட்ட செயலாளர் பெ.வீரையன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். நிகழ்வில் புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் அறி வொளி, தஞ்சை மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் அருண கிரி, பட்டுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர்கள் அரு.நல்லதம்பி, சா.சின்னக் கண்ணு, மாவட்ட வழக்குரை ஞர் அணி தலைவர் அண்ணாத் துரை, மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் சி.இரமேஷ், மண்டல இளை ஞரணி தலைவர் சோம.நீல கண்டன், நீடாமங்கலம் ஒன் றிய தலைவர் கோ.கணேசன், மதுக்கூர் ஒன்றிய தலைவர் ஜோதி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் கரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக சார்பில் முன்னாள் பேரூ ராட்சி தலைவர் நா.அசோக் குமார், ஒன்றிய செயலாளர்கள் க.அன்பழகன், வை.இரவிச்சந் திரன், திமுக சொற்பொழிவாளர் அப்துல் மஜீது, தமிழ் ஆர்வலர் அன்னை தங்கம் ஜெயபால், பேரூராட்சி துணை பெருந் தலைவர் கி.ரெ.பழனிவேல், அறிஞர் அண்ணா ஆனந்தராஜ், அதிமுக சார்பில் மாவட்ட மருத்துவரணி துணைச் செய லாளர் டாக்டர் மு.சீனிவாசன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் ஆர்.பி.இராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் உ.துரை மாணிக்கம், நகர செயலாளர் பக்கிரிசாமி, காங்கிரசு சார்பில் நகர தலைவர் வீ.க.நடராஜன், மதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் மு.கி.லெனின், வ.பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் க.குமார், கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் பாலசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மைதீன், திரா விடர் கழகம் சார்பில் பழ.வே தாசலம், த.பெரியராஜன், குழ. அரங்கசாமி, சி.சந்திரமோகன், வெ.க.நீலகண்டன், பொறி யாளர் தாய்பில்டர்ஸ் இளங்கோ, அ.பாலசுப்பிர மணியன், சி.ஜெகநாதன், அறந்தை சவுந்தராஜன், மகா ராசா, சந்திரக்குமார், மு.இரணியன், பொதுக்குழு உறுப் பினர், கு.கண்ணுச்சாமி, கீரமங் கலம் அ.தங்கராசு மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித் தனர். முன்னதாக காலை 9.45 மணியளவில் மாவட்ட மாண வரணி தலைவர் இரா.மணி கண்டன், முனைவர் கரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் கொன்றைக்காடு கடைவீதியில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணி வித்து வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்நிகழ்வில் அறந் தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, பேரூராட்சி துணை பெருந்தலைவர் பழனி வேல், அறிஞர் அண்ணா பள்ளி முதல்வர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க! என்ற ஒலி முழக்கங் களுடன் 25 இருசக்கர வாக னங்கள் புடைசூழ 3 கி.மீ. தூரம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பேராவூரணி நகரம் முழுவதும் துணி மற்றும் பேப்பர் கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சாலையின் இரு புறங்களிலும் மூங்கில் கம்பு களில் கழகத்துணிக் கொடிகள் கட்டப்பட்டு பறக்க விடப் பட்டிருந்தது, கண்கவர் காட்சியாக இருந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று மூன்று இடங்களில் அலங்கார வளைவுகள் வைக் கப்பட்டு இருந்தன. நகரில் முக்கியமான 15 இடங்களில் ஆசிரியரை வரவேற்று டிஜிட் டல் போடு வைக்கப்பட்டு இருந்தன. நகர செயலாளர் மு.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment