தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் வருவாய் கிராமங்கள் விவரம் கண்காணிப்புக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. காரீப் பருவ பயிர்களுக்கான விதைக்க முடியாத நிலை, விதைப்பு, நடவு பொய்த்து போதல், அறுவடைக்கு பின் இழப்பு ஆகிய நிலைகளுக்கு பிரிமியம் செலுத்த கடைசி நாள் நிர்ணயம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் கலெக்டர் அண்ணாதுரை பேசிய தாவது. குறுவை நெற்பயிருக்கு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை ரூ.531 ஆகும். பிரிமியம் செலுத்த கடைசி நாள் ஜூலை 31-ந் தேதியாகும். மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.450. உளுந்து, பச்சைப்பயறுக்கு ரூ.286-ம், நிலக்கடலைக்கு ரூ.476-ம், எள்ளுக்கு ரூ.240-ம் ஏக்கருக்கு பிரிமியமாக செலுத்த வேண்டும். மக்காச்சோளம், உளுந்து, பயறு, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களுக்கு பிரிமியத் தொகை செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 16-ந் தேதியாகும். தோட்டக்கலை பயிர்களான மரவள்ளிக்கு ரூ.230-ம், வாழைக்கு ரூ.2,838-ம் பிரிமியம் செலுத்த வேண்டும். பிரிமியத் தொகை செலுத்த வேண்டிய கடைசி நாள் அக்டோபர் மாதம் 1-ந் தேதியாகும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வேளாண்மை இணை இயக்குனர் மதியழகன், துணை இயக்குனர்கள் ஜஸ்டின், கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Saturday, 26 May 2018
குறுவை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.531 பிரிமியம் செலுத்த வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment