Friday, 25 May 2018

தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பொது இ - சேவை மையங்களில் ஓய்வூதியர் அட்டை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பொது இ- சேவை மையங்களில் ஓய்வூதியர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறலாம் என மாவட்ட கருவூல அலுவலர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் ஏறத்தாழ 30,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்குப் பணப் பலன்கள் கருவூலம் மூலம் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி, இ- சேவை மையங்களில் அடையாள அட்டை பெறலாம் என அரசு உத்தரவிட்டது. மேலும், வட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி இ- சேவை மையங்களில் புகைப்படம் மற்றும் ஓய்வூதியப் புத்தகத்தை வழங்கி ரூ. 30 கட்டணம் செலுத்தி அடையாள அட்டைப் பெறலாம். ஓய்வூதியர் வாழ்நாள் சான்றுகளை அளிக்க நேர்காணல் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேரில் பங்கேற்க முடியாதவர்கள் ஜீவன் பிரமாண் என்ற இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment