Wednesday, 30 May 2018

பேராவூரணியில் பால் விற்பனை கடையில் திருட்டு

பேராவூரணி: பேராவூரணி சேதுசாலையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா எதிரில் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பால் பாக்கெட் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அம்மையாண்டி பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (39) என்பவர் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் சத்தியசீலன் வியாபாரத்தை முடித்து விட்டு திங்கள்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். செவ்வாய்க்கிழமை காலை கடைதிறக்க வந்த சத்தியசீலன், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த விற்பனை பணம் ரூ. 11 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வர்த்தக சங்க தலைவர் பி.எஸ்.அப்துல்லா கடையை பார்வையிட்டு, விபரங்களை கேட்டறிந்தார். புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment