Tuesday, 22 May 2018

பேராவூரணி அருகே மதுக்கடையின் கதவை உடைத்து பணம்-மதுபாட்டில்களை கொள்ளை

பேராவூரணி: பேராவூரணி அருகே கொரட்டூர் கிராமத்தில் ரெட்டவயல் சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக கேசவராஜ் என்பவரும், விற்பனையாளர்களாக கிருஷ்ணமூர்த்தி, ராஜா ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள்.  சம்பவத்தன்று இவர்கள் வழக்கம்போல் விற்பனையை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் காலையில் அப்பகுதி பொதுமக்கள் கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பதை பார்த்து, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  கொள்ளை  இதைத்தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரி திருஞானம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் மதுக்கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் சம்பவத்தன்று நள்ளிரவு கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.11 ஆயிரத்து 570 மற்றும் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.30 ஆயிரத்து 460 ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுக்கடையில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment