Sunday, 3 June 2018

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் குமரப்பா பள்ளி மாணவிக்கு பாராட்டு

பேராவூரணி: பிளஸ் 1 அரசுப் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற குமரப்பா பள்ளி மாணவி டி.பூமிகாவுக்கு பள்ளி தாளாளரும், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைத் தலைவ ருமான டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் பாராட்டி கேடயம் பரிசளித்தார்.  பிளஸ் 1 பொதுத் தேர்வில் பேராவூ ரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் தேர்வெழுதிய 229 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவி டி.பூமிகா 551 மதிப்பெண்களுடன் முதலிடமும், பூமிகா 550 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவிகள் திவ்யபிரியா, கீத பிரேமி ஆகியோர் 544 மதிப்பெண்க ளுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.  500 முதல் 551 வரை 16 பேரும், 451 முதல் 499 வரை 48 பேரும், 400 முதல் 450 வரை 53 பேரும் மதிப்பெ ண்கள் பெற்றுள்ளனர். சாதனை மாணவ ர்களையும், ஆசிரியர்களையும், குமரப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் ராமு, கணபதி, ஆனந்தன், பொறியாளர் அஸ்வின் ஸ்ரீதர், பிரியதர்ஷினி ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment