Sunday, 3 June 2018

மேட்டூர் அணையை 12ம் தேதி திறக்க வேண்டுமென நுகர்வோர் குழு கோரிக்கை

பேராவூரணி:  மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி திறக்க வேண்டுமென புனல்வாசல் நுகர்வோர் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து புனல்வாசல் நுகர்வோர் குழு தலைவர் சவரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 6 ஆண்டுகளாக உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாததால் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் பாதித்து தொழிலாளர்கள் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது    எனவே இந்த ஆண்டாவது பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதியை அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment