Friday, 1 June 2018

ஆவணத்தில் மாநில பூப்பந்தாட்ட போட்டி: ஜூன் 2ஆம் தேதி தொடக்கம்

ஆவணம்: பேராவூரணி அருகேயுள்ள ஆவணத்தில் மாநில அளவிலான ஆண்களுக்கான ஐவர் பூப்பந்தாட்டப் போட்டி ஜூன் 2, 3 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகத்தின் முன்அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படும் இப்  போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 25 ஆயிரமும்,  மூன்றாம் பரிசாக ரூ. 20 ஆயிரமும்,  நான்காம் பரிசாக ரூ. 15 ஆயிரமும்,  ஐந்து சிறந்த ஆட்டக்காரர்களுக்கு சிறப்பு பரிசும், வெற்றிக் கோப்பையும் வழங்கப்படவுள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆவணம் முத்தமிழ் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment