பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியின்(இருப்பு- முடச்சிக்காடு) புதிய முதல்வராக வெ.செந்தமிழ் செல்வி பொறுப்பேற்றுக் கொண்டார்.இதன்பின் கல்லூரி முதல்வர் வெ.செந்தமிழ் செல்வி கூறுகையில், “வரும் ஜூன் 4-ம் தேதி காலை 11 மணிக்கு முதல் கட்டமாக அனைத்து பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். அன்றைய தினமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் மதிப்பெண் பட்டியல், சாதி சான்று, மாற்றுச் சான்றிதழுடன் வர வேண்டும். தேர்வு செய்யப்படுவோர் கல்லூரி கல்விக் கட்டணத்தை செலுத்த தயாராக வர வேண்டும். அரசு விதிமுறைப்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும்” என்றார்.புதிய கல்லூரி முதல்வரை, பேராசிரியர்கள் ராணி, பழனிவேலு, மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர் சாமிநாதன், மாணவ, மாணவிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Sunday, 3 June 2018
பேராவூரணி அரசு கல்லூரியில் ஜூன் 4ல் மாணவர் சேர்க்கை ஆரம்பம்
thanjavur
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment