Monday, 18 June 2018

கலைஞர் 95வது பிறந்த நாளை முன்னிட்டு பேராவூரணி திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பரிசு




பேராவூரணிதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 95 ஆவது பிறந்த தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் திமுகவினர் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து, பல்வேறு இடங்களில் கட்சிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிகளுக்கு ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சண்.ராமநாதன் பல்வேறு இடங்களில் கொடியேற்றி வைத்தார். சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நோட்டு புத்தகங்கள் இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment