Sunday, 17 June 2018

ரம்ஜான் பண்டிகை: இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்


பேராவூரணி: பேராவூரணி கடைவீதியில் உள்ளமுகையதீன் ஆண்டவர் பள்ளியில் சனிக்கிழமை காலை நடைபெற்ற பெரு நாள் தொழுகையில் ஆயிரக்க ணக்கான இஸ்லாமிய ஆண், பெண், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் ரமலான் சிறப்பு திடல் தொழுகை வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள திடலில் நடைபெற்றது. ஆவணம் சாஜித் இமாமாக இருந்து தொழுகையை நடத்தி வைத்து, சிறப்புரை நிகழ்த்தினார். இதில் நூற்று க்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட சிறுபான்மை நலக்குழு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் பி.செந்தில்குமார், பி.எம்.காதர்உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment