Saturday 30 June 2018

மல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் 6-ந் தேதி ஒத்திவைப்பு!

மல்லிபட்டினம்: தஞ்சை மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு, மாநில செயலாளர் மல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் சங்கத் தலைவர் அ.தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலார் க. வடுகநாதன், சேதுபாவாசத்திரம் சங்க முன்னாள் தலைவர் து. செல்வக்கிளி, தலைவர் மு.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், கடந்த 24ந் தேதி சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 29) மல்லிபட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் குறித்து கடந்த 27 ந் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை கூறியதை அடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதத்தில், விசைப்படகு உரிமையாளர்களை, துறை அலுவலர்கள் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் எனக்கூறியும், அதிகாரிகள் அழைத்துப் பேசாதது வருத்தமளிக்கிறது. மாவட்ட ஆட்சியரின் அணுகுமுறைக்கு மதிப்பளித்தும், வருவாய்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மீன்துறை அலுவலர்களுக்கு கால அவசகாசம் அளிக்கும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 29) மல்லிபட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் காலை 9 மணிக்கு நடைபெற இருந்த மறியல் போராட்டம் வரும் (ஜூலை 6) வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தீர்மானம் .

No comments:

Post a Comment