Sunday 1 July 2018

வணிக நிறுவனங்கள் பண்டிகை கால பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்த தடை

தஞ்சாவூர்:-  தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு ஆடி மாத சிறப்பு குலுக்கல், ரம்ஜான் பண்டிகை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என பண்டிகைகளை முன் வைத்து பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துவதன் மூலம் பொருட்களின் விலையை கூட்டியும், அளவை குறைத்தும், தரமற்ற மற்றும் பழைய, கலப்பட விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரவும் வாய்ப்புள்ளது. மேற்படி செயல்கள் பரிசுப் போட்டிகள் தடைச்சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத்திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978, தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகிய சட்டங்களின் படி பரிசுப்போட்டிகள் நடத்துவது சட்டத்திற்கு விரோதமான செயலாகும், மேற்படி சட்டங்களை மீறி பரிசு குலுக்கல் திட்டங்களை அமல்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, நுகர்வோர்கள் மேற்கண்ட பரிசுத் திட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment