Thursday, 24 May 2018

மல்லிப்பட்டினம் அருகே வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்

சேதுபாவாசத்திரம்:  திருவாரூர் மாவட்டம் பாங்களை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (42). நேற்று முன்தினம் தனது உறவினர்கள் 15 பேருடன், தஞ்சை மாவட்டம் மருங்கப்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்றனர். நேற்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வேனில் ஊர் திரும்பினர்.  சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது சரபேந்திரராஜன்பட்டினம் பாலம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ரமேஷ்குமார், சீதா (42), செல்வி (35) ஆகியோர் மேல்சிகிச்சைகாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment