தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (மே 24) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது: இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர், வட்டத்தை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 23 May 2018
தஞ்சையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment