சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கள்ளங்காடு கிராமத்தில் முத்தரையர் சங்க சிலை, கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து வீரமுத்தரையர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராவூரணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வீரமுத்தரையர் வழக்குரைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சு.சதீஷ் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் க.சுந்தர் கண்டன உரையாற்றினார். முத்தரையர் சங்கத்தின் சின்னமான சிங்கம் சின்னத்தையும், அமைப்பின் கொடிக்கம்பத்தையும், கடந்த சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேராவூரணி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, வழக்குப் பதியாமல், சங்க நிர்வாகிகளை போலீஸார் மிரட்டியதாகவும், சிலை உடைப்பில் தொடர்புடையோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காவிடில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sunday, 6 May 2018
பேராவூரணியில் முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
pvi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment