Monday, 4 June 2018

பொது இ-சேவை மையங்கள் மூலம் 15 வகையான சான்றிதழ்கள் பெறலாம் ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் மூலம் 15 வகையான சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் பொது இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமண சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்த மைக்கான சான்றிதழ், ஆண் குழந்தை இன்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், செல்வ நிலைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் ஆகிய 15 வகையான சான்றிதழ்கள் பெறுவதற்கு பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொது இ-சேவை மையங்களில் மட்டுமே விண்ண ப்பிக்கலாம்.  விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். விண்ணப்பத்தின் விவரம் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும், பொதுமக்கள் 155250 என்ற எண்ணிற்கு தங்களது விண்ணப்ப எண்ணை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பியோ அல்லது இணைய தளத்தில் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தோ, விண்ணப்பங்களின் நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு இணைய தள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன் விண்ணப்பதாரர் வீட்டில் இருந்தவாறே இணைய தளம் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகாமையிலுள்ள அரசு பொது இ-சேவை மையம் மூலம் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.  மேலும், விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் விவரங்களை hவவயீள:/றறற.வநேளநஎயi.வn.படிஎ.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மகளிர் திட்டம், அரசு கேபிள் டிவி மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் ஆகியவற்றின் மூலம் பொது இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment