Friday, 1 June 2018

இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தேதி ஒத்திவைப்பு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 09.06.2018 அன்று நடைபெறவிருந்த இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் எதிர்வரும் 21.07.2018 அன்று மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 09.06.2018 முதல் 17.06.2018 வரை நடைபெறவிருந்த இந்திய விமான படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் எதிர்வரும் 21.07.2018 முதல் 29.07.2018 வரை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.  விமானப் படை ஆட்கள் தேர்வு முகாம் தொடர்பான விரிவான அறிவிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment