Friday, 1 June 2018

பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதியில் கண் பரிசோதனை முகாம்


  • பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில், பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமையில், புதன்கிழமை அன்று கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.  டாக்டர் கோகிலா முன்னிலை வகித்தார். கண் பரிசோதகர் திரவியம் கண் நோயாளிகளை பரிசோதனை செய்தார். 



  • முகாமில்  67 நபர்கள் சிகிச்சை பெற்றனர். இதில் 25 நபர்களுக்கு கண்புரை இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு, நவீன பேக்கோ முறையிலான கண் அறுவை சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு இராஜாமிராசுதார் கண் மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். புற நோயாளிகளுக்கு கண் சொட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் மருந்தாளுனர் சரவணன், செவிலியர்கள் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment