Friday, 1 June 2018

பேராவூரணி அருகே குருவிக்கரம்பையில் இரு கடைகளில் தீ விபத்து

பேராவூரணி:  பேராவூரணி அருகே குருவிக்கரம்பையில் ஞாயிறன்று நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 கடைகள் லேசாக சேதமடைந்தன.குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியில் இதே பகுதியைச் சேர்ந்த பழனிவேலு இனிப்பகம் மற்றும் பழ ரசக்கடைநடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் குறவன் கொல்லை பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவர் மருத்துக்கடை நடத்தி வருகிறார். ஞாயிறு இரவு இருவரும் கடையைமூடிவிட்டு வீடு சென்று விட்டனர்.நள்ளிரவில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதனால் பெருத்த சேதமின்றி கடை தப்பியது. இதற்கு அருகில் உள்ள முத்துவேல் என்பவரது கடையில் சில தினங்களுக்கு முன்பு தீப்பற்றியதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் குறித்து பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment