Wednesday, 16 May 2018

பேராவூரணியில் குடிநீர் குழாயில் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்திய 18 மின்மோட்டார்கள் பறிமுதல்

பேராவூரணி-: பேராவூரணி பேரூராட்சி ஆதனூர், கருப்ப மனை 11, 12 ஆகிய வார்டு களில் சீரான குடிநீர் விநி யோகிக்கப்படவில்லை என க்கூறி, பொதுமக்கள் பேரூ ராட்சி அலுவலகத்தில் நே ரில் சென்று முறையிட்டனர்.இதையடுத்து ஆட்சி யர் அண்ணாதுரை உத்தர வின்பேரில், பேரூராட்சிகள் துறை தஞ்சை மண்டல உதவிஇயக்குநர் ந.விஸ்வநாதன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  இந்நிலையில், செவ்வா ய்க்கிழமை காலை பேரூ ராட்சி தலைமை எழுத்தர்வி.சிவலிங்கம் தலைமை யில் அதிகாரிகள் ஆதனூர், கருப்பமனை பகுதியில் எஸ்.பி.ஜி.சர்ச் ரோடு, ஆர்.சி.சர்ச் ரோடு, கருப்பமனை மெயின்ரோடு, காமாண்டி கோ வில், வீமநாயகி அம்மன் கோவில் தெரு, மேலத்தெரு, கிழக்கு தெரு உள்ளி ட்ட 11, 12 ஆவது வார்டுக ளில் வீடு வீடாகச் சென்று திடீர்ஆய்வு நடத்தினர். இதில், குடிநீர் குழாய் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு, மின்மோ ட்டாரை பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவதும், தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகளுக்கு பய ன்படுத்துவதும் கண்ட றியப்பட்டு, 18 மின் மோட்டா ர்கள் மற்றும் தோட்டங்க ளுக்கு தண்ணீர் பாய்ச்சிய சுமார் 800 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் பறிமுதல் செய்ய ப்பட்டன.

No comments:

Post a Comment