பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சிற்றம்பலத்தில் சந்தைப்பேட்டை சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதாக கூறியதை தொடர்ந்து கடந்த ஆண்டு கடை மூடப்பட்டது. மூடப்பட்ட கடையை தற்போது மீண்டும் செருவாவிடுதி சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெட்ரோல் நிலையம் , பள்ளிக்கு அருகில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சிற்றம்பலம் ,சித்துக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாதென வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் கலால் வட்டாட்சியர் கோபி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் , 10 நாட்கள் வரை கடையை திறப்பதில்லையெனவும் அதற்குள் கிராம மக்கள் ஆட்சியைரை நேரில் சந்தித்து டாஸ்மாக் கடை தொடர்பாக பேசி முடிவு செய் து கொள்ளலாம் என கூறியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் பட்டுக்கோட்டை புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Saturday, 5 May 2018
திருச்சிற்றம்பலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: சாலை மறியல்
thanjavur
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment