தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சரக்குகள்மற்றும் சேவை வரி தொடர்பான பயிற்சி வகுப்பினை மாவட்டஆட்சியர் ஆ.அண்ணாதுரை புதன்கிழமை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது - “வணிக வரித்துறையின் சார்பில் சரக்கு வரி மற்றும் சேவை வரி குறித்த ஆலோசனைக் கூட்டம், விழிப்புணர்வு பயிலரங்கம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மற்றும் கணக்கு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது. இப்பயிற்சி வகுப்பில் ஒப்பந்தப் பணி முடிந்தவுடன் வரிபிடித்தம் செய்வது குறித்தும், சேவை வரி பிடித்தம் குறித்தும்தெரிவிக்கப்படவுள்ளது. அனைத்து அலுவலர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருசில பணிகள் நடைபெறும் பொழுதுஒப்பந்தாரர்களுக்கு பகுதி பகுதியாக பட்டியல் நேர் செய்யும்பொழுது அவர்களுக்கான வரி பிடித்ததில் சந்தேகம் ஏற்படுகின்றது. இது போன்ற சந்தேகங்களை தற்போது நடைபெறும்பயிற்சி வகுப்பில் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கு விடுதிகள், திரையரங்குகள் போன்ற இடங்களில் சேவைவரி தொடர்பாக விரிவாக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
Thursday, 21 June 2018
தஞ்சையில் சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான பயிற்சி வகுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment