பின்னவாசல்: பேராவூரணி அருகே முறைகேடாக ஏரியில் மண் அள்ளுவதைக் கண்டித்து சாலை மறியல் நடத்தப்படும் என கிராமத்தினர் அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பின்னவாசல் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், "முறைகேடாக தனிநபர் ஒருவர் வண்டல் மண் அள்ளி விற்பனை செய்து வருவதாகவும் அவர் ஏரியின் கரைகளை உடைத்தும் ஆங்காங்கே மண் அள்ளுவதால், பெரும் பள்ளங்களாக மாறி வருகிறது. அரசின் விதிமுறைகளை மீறி சீரற்ற முறையில் மண் அள்ளுவதால், ஏரியின் தன்மை மாறி வருகிறது. நீர்வரத்து பாதைகள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே இதனை கண்டித்து வரும் ஜூலை 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை பேராவூரணி - அறந்தாங்கி மெயின்ரோட்டில் சித்தாதிக்காடு முக்கத்தில் நிர்வாக கமிட்டி தலைவர் ஆர்.பாலகார்த்திக் தலைமையில் சாலை மறியல் நடைபெறும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Sunday, 1 July 2018
பின்னவாசல் பெரிய ஏரியில் மண் அள்ளுவதைக் கண்டித்து மறியல்
thanjavur
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment