தஞ்சாவூர்:2019ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 2175 வாக்குச் சாவடிகளும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நகர்ப்புறத்தில் 1400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள்படி இரண்டு வாக்கு சாவடிகளாக பிரிக்கப்படவுள்ளது. வாக்கு சாவடிகளை மறுசீரமைப்பதை ஆய்வு செய்யும் பணி 21-6-2018 முதல் நடைபெற்று வருகிறது. 02-07-2018 அன்று வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் காலை 11.30 மணியளவில் கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகங்களில் வெளியிடப்படவுள்ளது. அந்தந்த சட்ட மன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் தொடர்புடைய வட்ட அலுவலகம் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொடர்புடைய வட்ட அலுவலகத்தில் 1-07-2018 வரை வாக்கு சாவடிகளை மறுசீரமைப்பது தொடர்பான கருத்தருக்களை எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்குச் சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தொடர்புடைய வட்ட அலுவலங்களில் 1-07-2018 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும். அதன் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளபடி. உரிய திருத்தங்களுடன் திருந்திய மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். மேலும், தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்டவர்கள். மற்றும் 1-1-2018 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 1-1-2000 ஆண்டு வரை பிறந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6 ஐ பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட அலுவலகத்தில் அளிக்கலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Sunday, 1 July 2018
தஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பணி!
political
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment