திருச்சிற்றம்பலம்: பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் கிராம சேவை மையத்தில் மத்திய அரசின் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கல்வி திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களின் சேமிப்பை பாதுகாப்பாக எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பட்டுக்கோட்டை அஞ்சல்துறை அலுவலர் (திட்டம்) ஜெரால்டு சகாயராஜ் தலைமை வகித்தார். அஞ்சல் துறையில் காப்பீட்டு திட்டங்கள் குறித்து பொது சேவை மைய அலுவலர் இளங்கோவன் பேசினார். பொது சேவை மைய மாவட்ட அலுவலர் செல்வின்ராஜா, திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலர் வேதாசலம், பொது சேவை மைய அலுவலர்கள் அருள்முருகன், ரம்யா, திருச்சிற்றம்பலம் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சேமிப்பு திட்டங்கள் பற்றிய குறும்படம் காண்பிக்கப்பட்டது, விளக்கக் கையேடுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
Sunday, 1 July 2018
திருச்சிற்றம்பலம் கிராம சேவை மையத்தில் விழிப்புணர்வு முகாம்நடைபெற்றது
pvi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment