Monday, 30 April 2018

தஞ்சை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள்மூடல்


தஞ்சை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, மாவட்டத்தில் சாலைகளை வகை மாற்றம் செய்து திறக்கப்பட்ட 28 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 131 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூரில் 11 கடைகளும், கும்பகோணத்தில் 7, பட்டுக்கோட்டை நகரில் 2,  பேரூராட்சிப் பகுதியில் 8 கடைகளும் மூடப்பட்டன. 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதையடுத்து மாவட்டத்தில் தற்போது 103 கடைகள் செயல்படுகின்றன.

No comments:

Post a Comment