Monday, 30 April 2018

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கே.லட்சுமி காந்தன், வ. விவேகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் உடனடியாக ரயில் சேவையை தொடங்க வேண்டும்.   பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரயில் பாதை   பணிகளை துரிதமாக முடித்து சென்னைக்கு ரயில் விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தரப்பு மக்களிடம்  கையெழுத்துப் பெற்று ரயில்வே அமைச்சருக்கு அனுப்புவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment