Monday, 30 April 2018

பேராவூரணி அருகே பள்ளி மாணவி பலாத்காரம்: இளைஞர் சரண்

பேராவூரணி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் சனிக்கிழமை போலீஸில் சரண்டைந்தார். சேதுபாவாசத்திரம் அருகே இரண்டாம் புலிக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் 15 வயது மகள், களத்தூரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் தங்கவேல் மகன் பிரவீன் ( 24 ) , மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ததில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரவீனை தேடிவந்தனர். இந்நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்த பிரவீன் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment