பேராவூரணி 17,18-ஆவது வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகிக் கப்படவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவின்பேரில் பேரூராட்சி தலைமை எழுத்தர்வி.சிவலிங்கம் தலைமையில் குடிநீர் திட்ட பணியாளர்கள் யோ.சார்லஸ், செல்வகுமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சந்தானசெல்வம், மின்பணியாளர் இ.கோவிந்தசாமி மற்றும் பணியாளர்கள் ஆனந்தவள்ளி வாய்க்கால் வடக்கு தெரு, தெற்கு தெரு,மணிக்கட்டி ரோடு உள்ளிட்ட வார்டு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று திடீர் ஆய்வு நடத்தினர். இதில் குடிநீர் குழாய் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு, மின் மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவதும், தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகளுக்கு பயன்படுத்துவதும் கண்டறியப் பட்டு, 15 மின் மோட்டார் மற்றும் தோட்டங்களுக்கு தண் ணீர் பாய்ச்சிய சுமார் 500 மீட்டர் நீள குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோடையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். காவல்துறை மூலமாக நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment