Tuesday, 1 May 2018

தஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் பொருத்த 30 சதவீத மானியம்!


சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனத்தினை கட்டிடங்களின் மேற்கூறையில் நிறுவிட 30 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் (TEDA) மூலம், மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும்  திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மத்திய அரசு. சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனத்தினை கட்டிடங்களின் மேற்கூறையில் நிறுவிட 30 சதவீத மானியம் அறிவித்துள்ளது.  இம்மானியம் பெறுவதற்கு தனியார் பள்ளிகள், கல்லுரிகள், சமுதாய கட்டிடங்கள், அரசு சாரா அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக்கான பணிமனைகள், தனிநபர் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை தகுதியானவை ஆகும்,  சூரிய மின் உற்பத்தி சாதனம் மு்லம் உற்பத்தி செய்யப்படும்  மின்சாரத்தை. சு{hpய ஒளி சாதனத்தை பயன்படுத்துபவர்கள்.  பயன்படுத்தியது  போக மீதமுள்ள  மின்சாரம் மின்வாரியத்திற்கு நெட் மீட்டர் மூலம் அனுப்பபடுவதால் மின் கட்டண செலவினம் பெருமளவில் குறைகிறது,  இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார தேவைக்கேற்ப ஒரு கிலோ வாட்  முதல்  500 கிலோ வாட்  வரை  சூரிய மின் உற்பத்தி சாதனத்தை அமைக்கலாம். ஒரு கிலோ உற்பத்திக்கு  தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.60,000-/ ஆகும்,  இதில் மத்திய அரசின் மானியம் ரூ.18,000-/ பயனாளி சூரிய மின் உற்பத்தி சாதனத்தை வாங்க செலவிட வேண்டிய தொகை ரூ.42,000-/ மட்டுமே, சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனத்தை  முழுமையாக 25 ஆண்டுகள் பயன்படுத்தலாம்.  இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2டூவது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமையில்  உள்ள TEDA பிரிவில் உரிய ஆலோசனைகள் பெற்றிடலாம்.  மேலும், அலுவலக வேலை நாட்களில்  அப்பிhpவில்  உதவி பொறியாளரை  நேரடியாகவோ அல்லது 7708064632, 7708064720, 7708064628  ஆகிய செல்போன்  எண்களை தொடர்பு கொண்டும் மற்றும்  வதே்வநனய.in மின்னஞ்சல்  மூலமாகவோ  சூரிய மின்  உற்பத்தி சாதனம் மற்றும் மானியம் தொடர்பான  அனைத்து தகவல்களையும்  பெறலாம்.  எனவே விருப்பம் உள்ள அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment