பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, காளியம்மாள்(எ) கனகா தம்பதியின்மகன் சிவகுரு பிரபாகரன்(29). இவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 101 ஆவது இடத்தையும், தமிழக அளவில் 3 ஆம் இடத்தையும் பிடித்துசாதனை படைத்துள்ளார்.மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தபிரபாகரன் மேலஒட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் வழியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். 6 முதல்12 ஆம் வகுப்பு புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும்பள்ளியில் தமிழ் வழியில் படித்தார். புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படிப்பை முடித்த இவர், பிறகுவேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் பி.இ.,சிவில் இன்ஜினியரிங் பயின்றார். பின்னர் சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக்முடித்த இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் கனகா கூறுகையில், பிரபாகரனுக்கு சிறு வயதிலிருந்தே மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும்என்ற ஆசை. நாங்கள் தென்னங்கீற்று பின்னுவது, மரத்துாள் அள்ளுவது, பால்வியாபாரம் போன்ற வேலைகள் செய்தே அவரை படிக்க வைத்தோம். இவருடன் பிறந்தது ஒரு சகோதரன், சகோதரி. பிரபாகரன் புனல் வாசல் பள்ளிக்கு செல்ல சைக்கிள் இல்லாமல், நடந்தேசென்று படித்தான். அதன் பிறகு வீட்டில் வளர்ந்த கோழிகளை விற்று ஒரு பழையசைக்கிள் வாங்கி கொடுத்தேன். தற்போதுஎனது மகன் ஆட்சியராக படித்து வெற்றி பெற்றது எனது குடும்பத்தாருக்கும், கிராமமக்களுக்கும் பெருமையாக உள்ளது என ஆனந்த கண்ணீர் மல்க தெரிவித்தார்.சிவகுரு பிரபாகரன் கூறுகையில், எனது வெற்றிக்கு பல தடைகள் இருந்தாலும், அதையும் தாண்டி சாதித்து தற்போதுஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி அடைந்து இருப்பது எனது கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக பார்க்கிறேன் என்றார். தற்போது இதே ஊராட்சியைச் சேர்ந்த 4 பேர், மதன்பட்டவூர் பகுதியைச் சேர்ந்த சத்தியசுந்தரம் ஐபிஎஸ், உமா என்பவர் ஐஎப்எஸ், புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஐஆர்எஸ் ஆகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 1 May 2018
கீற்று பின்னும் பெண் தொழிலாளியின் மகன் ஐஏஎஸ் தேர்வில் சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment