பேராவூரணி கடைவீதியில் பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் மதிவாணன் என்பவரது வீடு உள்ளது. இவர் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வதனாவுடன் குடியிருந்து வருகிறார். பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் திருவிழா விடையாற்றி உற்ஸவ நாளான செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு இவ்வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற சிலர் வாணவெடிகளை வெடித்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்து சிதறிய தீப்பொறி மதிவாணன் வீட்டின் மாடியில் வெயிலுக்காக அமைக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையில் பட்டு தீப்பற்றி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தினர் நிலைய அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன் தலைமையில் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. கடைவீதி பகுதியாக இருப்பதால் தீ பரவியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

No comments:
Post a Comment