Thursday, 3 May 2018

பேராவூரணி கோயில் செயல் அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா


பேராவூரணி ஏந்தல், முடப்புளிக்காடு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் செயல் அலுவலராகவும், இந்து சமய அறநிலையத்துறையில் 18 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி கடந்த ஏப். 30 அன்று பணிநிறைவு பெற்ற செயல் அலுவலர் டி.கோவிந்தராஜூக்கு பாராட்டு விழா செவ்வாயன்று நடைபெற்றது. திருக்கோயில் சேவார்த்திகள் மண்டபத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார் தலைமை வகித்தார்.

No comments:

Post a Comment