தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க த்தின் 2 ஆவது கிளை மாநாடு பேராவூரணி, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக கல்வி மையம், பெரியார் - அம்பேத்கர் நூலக த்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.மாநாட்டிற்கு கிளைச் செயலாளர் எஸ்.ஜகுபர்அலி தலைமை வகித்தார். கிளை பொருளாளர் ஆர்.எஸ்.வேலு ச்சாமி வரவேற்றார். தமுஎகச மாநில துணைச் செயலாளர்கவிஞர் களப்பிரன் மாநாட்டை தொடங்கி வைத்தும், புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் பேசினார். இம்மாநாட்டில் புதிய கிளைச் செயலாளராக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தலை வராக கே.எஸ்.சமந்தா, பொருளாளராக தா.கலைச்செ ல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வழக்கறிஞர் வீ.கரு ப்பையன், பைங்கால் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Thursday, 3 May 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment