Thursday, 3 May 2018

ஐஏஎஸ் தேர்வில் வென்ற ஒட்டங்காடு மாணவரை மிரட்டும் வங்கி

கல்விக்கடன்:   இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தைபிடித் துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சிவகுரு நாதன் கல்விக்கடனை உடனே கட்டக்கோரி பொதுத்துறை வங்கி தன்னை துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.தனது வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பத்தாயிரம் ரூபாயை எடுக்கமுடியவில்லை என்றும் இதனால் புதுதில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு செல்ல பணமில்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வேலை கிடைக்கும் முன்பே கடனை திருப்பிச் செலுத்துமாறு நிர்ப்பந்திப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். தனது நண்பர்கள் சிலர் அளித்த பணத்தைக் வைத்துக்கொண்டு நேர் முகத்தேர்வுக்கு செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார். வங்கி அதிகாரிகள் தங்களது கடமையை செய்வதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களது செயல் கள் வருத்தமளிப்பதாக உள்ளது என்று மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வில் அகில இந்திய அளவில் 101 ரேங்க் பெற்றுள்ள அவர் கூறினார். படிப் பதற்காக இவர் பல ஆண்டுகளாகவே கஷ்டப்பட்டுள்ளார். இருப்பினும் தனது இலக்கை எட்டுவதற்காக புத்தகங்கள் வாங்குவது என்ற நிலைப்பாட்டில் இருந்து மட்டும் ஒருபோதும் பின்வாங்கவில்லை.2004 ஆம் ஆண்டு பிளஸ் டூ முடித்த பிரபாகரன், தினக்கூலி தொழிலாளியாக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மேல் நிலை கல்விக்கான கட்டணத்தை செலுத்தக்கூடிய நிலையில் இவரது குடும்பத்தின் பொருளாதாரம் இல்லை. எனவே இவரே வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு மேற்படிப்பை தொடர்ந்துள்ளார். அதே நேரத்தில் தனது கல்வியால் இதுபோன்ற இடர்பாடுகளை கடந்து விடமுடியும் என்று அவர் கருதினார். தனது 29வது வயதில் இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார். இவர் விரைவில் நேர்முகத்தேர்வை கடந்து பணியில் சேர உள்ளார்.தில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு செல்ல பணம் எடுக்க வங்கிக்கு சென்றபோது வாங்கிய கல்விக்கடனை உடனே செலுத்தவேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடனை திருப்பி செலுத்த மேலும் அவகாசம் அளிக்கக்கோரி முறையிட வங்கியின் மேலாளரை சந்திக்க முயன்றபோது பாதுகாவலர் தடுத்துவிட்டார். 2008ல் சிவில் என்ஜீனியரிங் படிப்பில் சேர்ந்த அவர் அதற்காக ரூ.76 ஆயிரத்தை பேராவூரணியில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கிக்கிளையில் கடனாக பெற்றார். எனக்கு வேலை கிடைத்தவுடன் கடனை திருப்பிசெலுத்திவிடுகிறேன் என்று திரும்ப திரும்ப கூறியபோதிலும் வங்கி அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டனர் என்றார்.வங்கியில் வங்கிய கடனில் பெரும் பகுதியை ஐஐடி சென்னையில் படித்தபோது வெளிநாட்டு பதிப்பகங்களின் புத்தகங்களை வாங்க செலவிட்டதாகவும் படிக்கும்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் கிடைத்த மாத கல்வி உதவித்தொகையான ரூ.8 ஆயிரம் படிப்பு செலவு மற்றும் மாதாந்திர தேவைக்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார். இதற்காக அவர் தனது நண்பர்கள் பலரிடமும் கடன் வாங்கித்தான் படித்து முடித்திருக்கிறார். இப்படி நண்பர்களிடம் அவர் வாங்கிய கடன் மட்டும் ரூ.2.5லட்சம் உள்ளது. அதை அவர் திருப்பிச் செலுத்தவேண்டும்.“ வங்கியில் வாங்கியுள்ள கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் எனது பெற்றோரின் வருமானம் இல்லை. அவர் களும் படித்தவர்கள் அல்ல. சாதாரண ஏழை கூலித் தொழிலாளர்கள். கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் பொதுத்துறை நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் மக்களுக்கு சேவையாற்ற இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற இலட்சியம் காரணமாக அந்த வேலையை ஏற்கமறுத்துவிட்டேன். தற்போது எனது கனவு நிறைவேறியிருப்பதால் வரும் ஆகஸ்ட் மாதத் திற்கு முன்பு அனைத்து கடன்களையும் திரும்பசெலுத்தி விடுவேன்’’ என்கிறார் பிரபாகரன்.தற்போது இவர் தனது சொந்த ஊரில் மற்ற மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற வழிகாட்டி வருகிறார்.இந்த பிரச்சனை குறித்து சென்னையில் உள்ள பொதுத்துறை வங்கியின் தலைமை அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாணவர்கள் தங்களது கல்விக்கடனை திருப்பிசெலுத்த வழங்கப்பட்டுள்ள காலஅவகாசத்திற்குள் கடனை செலுத்தவேண்டும். அப்படி திருப்பிசெலுத்தாத நிலைஏற்பட்டால் உடனே வங்கியின் அதிகாரிகளிடம் முறையாக தகவல் தெரிவிக்கவேண்டும். பொதுவாக குறித்த காலத்திற்குள் கடன் திருப்பி செலுத்தப்படாவிட்டால் 3 மாதம் கழித்து அந்த கடன் வாராக்கடன் பட்டியலில் சேர்ந்துவிடும்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment