பேராவூரணி ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராசு(55), கட்டடத் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில், பேராவூரணி கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் ராசு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராசுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, புதுக்கோட்டை கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி விசாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment