Friday, 11 May 2018

ஓட்டம் பிடிக்கிறது ஜெம்! நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு

நெடுவாசலில் பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்.  
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட த்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், வேறு இடத்தை ஒதுக்கித் தரும்படியும் அறி வித்துள்ள ஜெம் நிறுவனத்தின் கோரிக்கை யை மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடு த்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரு கில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹை ட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்ட த்தின்படி கடந்த ஆண்டு பிப்ரவரி 15அன்று அறிவிப்பு வெளியானது. இத னைத்தொடர்ந்து 16 ஆம் தேதி முதல் 22 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடை பெற்றது. மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் தற்கா லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு, ஜெம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டதால் ஏப்ரல் 12 ஆம் தேதி இர ண்டாம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டுபோராட்டம் நடத்திய மாணவர், வாலிபர்சங்கத்தினர் உட்பட 62 பேர் மீது கீரமங்க லம், வடகாடு, ஆலங்குடி காவல் நிலைய ங்களில் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஜெம் நிறுவனம் விலகல் கடிதம்  இந்நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வருடம் கடந்த நிலையில் நெடுவாசல் திட்ட த்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள ஜெம் நிறு வனம் நெடுவாசல் கிராமத்திற்குள் சென்று எந்த பணிகளும் செய்வதற்கு அப்பகுதி விவசாயி கள் அனுமதிக்கவில்லை. ஜெம் நிறுவனத்தால் நெடுவாசலுக்கே வரமுடியவில்லை. இந்நிலையில் ஜெம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தில்லியில் கூறும் போது, நெடுவாசல் திட்டம் செயல்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிலங்களை எங்கள் நிறுவனப் பெயருக்கு மாற்றித்தரக் கோரி தமிழக அரசு க்கும், மத்திய அரசுக்கும் பல முறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. ஜெம் நிறு வனம் என்பது லாப நோக்கம் கொண்ட வியா பார நிறுவனம் தான். ஆனால் ஒரு வரு டத்திற்கு மேலாக சம்பந்தப்பட்ட நிலம் மா ற்றிக் கொடுக்காததால் பணியை தொடங்க முடி யாமல் இழப்பு எற்பட்டுள்ளது. அதனால் நெடு வாசல் திட்டத்திற்கு பதிலாக மாற்று இடம் வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறை க்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறி யுள்ளார்.

விவசாயிகள் மகிழ்ச்சி 

இந்த அறிவிப்பு பத்திரிகையில் வெளி வந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோ யில் திடலில் கூடிய நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் ஜெம் நிறுவனம் நெடு வாசல் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்வ தாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறதுஎன்று கூறி பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் நெடுவாசலைக் காக்கப் போரா டிய விவசாயிகள், அரசியல் கட்சிகள், இளை ஞர்கள், சமூக நல அமைப்புகள், மாணவ ர்கள், திரைத்துறையினருக்கு நன்றி சொல்வதுடன், இந்த திட்டத்தை ஒப்ப ந்தம் செய்த நிறுவனமே வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் மத்திய அரசு முழுமை யாக இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு மாநில அரசும்அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் தமிழ கம், புதுச்சேரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த எந்த ஊரிலும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த கூடாது எனத் தெரிவித்து ள்ளனர்.  திட்டத்தை ரத்துசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்  இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோ ட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், ஒப்பந்தம் போட்டுள்ள நிறு வனமே நெடுவாசலில் செயல்படுத்த முடி யாது என்று தெரிவித்துள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக நெடுவாச லில் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்க வேண்டும். மாநில அரசும் இதுகுறித்து மத்திய அரசுக்குஅழுத்தம் கொடுக்க வேண்டும். மீண்டும் போ ராட்டக்களத்திற்கு மக்களை இழுத்துவரமால் பார்க்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது எனத் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment