பேராவூரணி: சிவகங்கை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதன்கிழமை மாலை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். வட்டப் பொருளாளர் மருததுரை வரவேற்றார். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் எந்த குற்ற மும் செய்யாத அப்பாவி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பயீர்க் காப்பீட்டுக்கு வழங்கிய அடங்கலில் விஸ்தீரணம் வித்தியாசம் உள்ளது என ஒரு தவறான தகவலின் அடிப்படையில் 17 அ மற்றும் 17ஆ பிரிவுகள் குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறைரீதியான நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய அதிகாரிகள் பல தவறுகள் செய்துள்ளனர். மேலும் தவறு செய்த மற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தகுதிகாண் பருவம், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. மாவட்ட மாறுதல் பெற்றவர்களை விடுவிக்கவும் இல்லை. இதுபோன்று சாதாரணமாக செய்ய வேண்டிய செயல்களை கூட செய்ய மறுக்கும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள சார் ஆட்சியர், கோட்ட நிர்வாகங்களையும், இதனை பல முறை எடுத்துக் கூறியும் கண்டுகொள்ளாத சிவகங்கை மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து மாநில அளவில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Friday, 11 May 2018
சிவகங்கை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment