Tuesday, 15 May 2018

பேராவூரணி அருகே கணவர் சாவில் சந்தேகம்: போலீஸில் பெண் புகார்

பேராவூரணி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்; கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார். பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தைச்சேர்ந்தவர் தனிஸ்லாஸ். திமுக ஊராட்சி செயலாளர். இவரது மகன் வின்சென்ட்லாஸ் (35). இவருக்கும் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜென்சிமேரிக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, ஜென்ஸிமேரி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வின்சென்ட்லாஸ் மட்டும் மனைவியை சென்று பார்த்து வருவாராம். வின்சென்ட்லாஸ்க்கும், குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த வின்சென்ட்லாஸ் வீட்டின் மாடியில் இருந்த பந்தலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜென்சிமேரி அளித்த புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment